வேண்டாதவை
உன்னால் வருகின்ற இன்பங்கள்
என்னால் ஒதுக்கிட முடியுமென
புறத்தில் உள்ளதனைத்தும் ஒதுக்கிடவே
எந்நாளும் இல்லை துன்பம்-இதனால்
அகத்தினிலும் பற்றெலாம் அழிந்திடும்
மனமோ உண்மைதனையே பற்றிடும்..
மெய்யுணர்வே இதன் காரணம் !
அகப்பற்றழித்தல் வேரினை அழித்தல்
வேரிலா கொடியும் வாடுதலாய் ..
புறப் பற்றும் ஒழியும்! !
இரு பற்றும் ஒழித்திட ..
வரும் உணர்தலில் அறியலாம்..
விறகு தீயினுள் நின்ற சோதியை
பசும்பாலினுள் மறைந்திருக்கும் நெய்
போல் மனதினுள் வசிக்கும் மாமணியை !
வள்ளுவன் வாக்கது .."யானென தென்னும்
செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த
உலகம் புகும்" .. என்பதும் கை கூடும்!