ஓர் அக்கிரகாரத்து பிராமணன்
ஓர் அக்கிரகாரத்து பிராமணன்
வாசலில் நிற்கிறான்
அதிதி என்று வரவேற்று
உணவு படைத்து உபசரிக்கிறேன்
அவனோ அரைவேக்காட்டு
அறிவியல் விளக்கமெல்லாம் சொல்லி
ஆண்டவனை இழித்தும் பழித்தும்
வசவு பாடுகிறான்
ஆயினும் நான் அதிதி தேவோ பவ என்று
வாழ்த்தி வணங்கி விடை கொடுத்து அனுப்புகிறேன்
எனக்கு இல்லறமும் நல்லறமும் முக்கியம் .
----கவின் சாரலன்
கவிக் குறிப்பு :
அக்கிரகாரம் : பார்பனச் சேரி
அதிதி : விருந்தினன்
அதிதி தேவோ பவ : விருந்தினன் கடவுளுக்கு சமானம்
திருக்குறள் : வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
--பருவத்து பாழ்படுதல் இன்று
ஓம்புவான் : உபசரிப்பவன்
பருவத்து : வாழ்வின் இன்ப துன்பம் எனும் பல பருவத்திலும்