உயிர் குடிக்கும் சாலைகள்

பலநூறு
ஜோடனைகளோடு!
சிலநூறு
ஆண்டுகளுக்கு
முன் புணர
ஆரம்பித்தது!!
என்னையும்
உன்னையும்_ஏன்
அவர்களையும்
இழுத்துப்போட்டது
தனக்குள்!!
பின்னொருநாளில்
ஆயுதங்களை
ஒப்பிவித்து
யுத்தம் செய்யென
கட்டளையும்
இட்டது!!
சிலரின்
புரிதல்களோடு
நெடும்போர் புரிந்து
பலரைக்கொண்டு
சிலரை புறப்பாடு
செய்தது!!
சிலரில் நானும்..
பலரின்
சுயலாபத்தில்
புள்ளிகளாகவே
இருந்துவந்த அது
இப்போதும்
அவர்களை
வைத்து
வாழ்ந்துவிடுகிறது!!
எங்கள் சிலரின்
கவிகளில்
அவ்வப்போது
மீட்க்கப்பட்டாலும்
மீளமுடியாமல்
புதைத்து
வைத்திருக்கிறோம்!!
இருந்தும்
பலநூறு
வடிவங்களில்
புணர்ந்துகொண்டே
இருக்கிறது!!
அதுபற்றி
குழந்தைகளுக்கு
தெரியாது!!
ஆனால்
போதிக்கப்படுகிறது...