கூடி வாழ்ந்தால் கோடி நன்மை --- எழுசீர் விருத்தம்

எறும்பு சொல்லும் பாடந் தன்னை
------ எப்போ நாமும் கற்பது ?
கருநி றத்துக் காக்கை போலக்
------ கூடி என்று வாழ்வது ?
குறும்பு சூழும் குடியை நாமும்
------- குழியில் என்று சேர்ப்பது ?
வரம்ப டர்ந்த புற்கள் போல
------ வாழ்வ தென்று சேர்ந்துமே ?

கூடி வாழக் கற்றுக் கொண்டால்
-------கூடும் நன்மை கோடியே .
தேடி வந்து நன்மை யாவும்
------- தென்றல் போல வீசிடும் .
வாடி ஓடும் தீமை யாவும்
------- வாழ்வு மலரக் காணலாம் .
நாடி வந்து நலம ழிக்கும்
------- நமது பகைவர் வீழ்வரே .

( மா + மா + மா + மா
மா + மா + விளம் )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-May-15, 8:34 pm)
பார்வை : 246

மேலே