மேகமும் மோகமும் தெளிந்த மனதும் வானமும் - 12218

கண்ணில் தெரியும் மேகமே நீ
கதிரின் திறனை உணந்திடாய்..!
காரணம் அதனால் தானோ என்
கண்களை ஏமாற்ற துணிகிறாய்
மேகமே நீயும் மோகமே நிறைந்து
மெய்ப் பொருள் மறைத்து மகிழ்கிறாய்
மோதிடும் காற்று வனப்பிலே மயங்கி
மெல்லவே கரைந்து அழிகின்றாய்...!