உணர்
இப்போது இருக்கும் நீ உண்மையில் நீதானா?
ஏச்சுக்கும் பேச்சுக்கும் நீ இடந்தரலாமா?
உன் வேக விவேகத்தை உன்னில் வேக வைத்தாயோ?
நீ கொண்டதோர் உயர்க்கனவு, அதற்கு இன்றே உயிர்க்கொடு.
உலகம் என்ன சொல்லும் என்று தயங்காதே
உன்னை விட வேறெவறும் இல்லை சாதிக்க
சிலநாள் கொண்ட எலிவேடம் மேடைக்காக
அதுவே அல்ல நீ உன் வெற்றிமேடை காண!