அன்பு அன்னை
உலகிற்கு என்னை அறிமுகம் செய்தாய்
உளமார என்மேல் அன்பைப் பொழிந்தாய்
மலர் கரங்களால் என்னை அணைத்தாய்
என் மழலை மொழி கேட்டு மகிழ்ந்தாய்
பசியால் நான் அழுதால் - என்
கண்ணீர் கண்டு நீ அழுவாய்
நிலத்தில் நான் விழுந்தால்
நொடிப் பொழுதில் நீ விரைவாய்
ஓடி ஓடி உணவூட்டினாய்
ஆடிப் பாடி மகிழ்வித்தாய்
தேடிப் பிடித்து விளையாடினாய்
உன் கண்ணின் கனவுகள் நான்
உன் வாழ்வின் வானவில் நான்
எனக்கென வாழ்கின்றாய் தாயே
என் உயிரில் கலந்திட்டாய் நீயே
அறிவுரை அளித்தாய் அன்னையாக
கலைகளைக் கற்பித்தாய் குருவாக
தோள்தட்டிக் கொடுத்தாய் தோழியாக
மணம் கமழும் பூவே
மனம் கவரும் ரதியே
வாழ்வளித்தாய் எனக்கு
வாழ்வை அர்ப்பணித்தேன் உனக்கு!
- அரங்க ஸ்ரீஜா