நியுட்டனும் ஆர்க்கிமிடிசும்

நீ வரும் வரை நான்
நானாகத்தான் இருந்தேன்
நியூட்டனின் முதல் விதிப்போல்

நீ எதிர்வரும் நேரம்
எல்லாம் எனது
நடையில் உந்தம் மாறுகிறதே
நியூட்டனின் இரண்டாவது விதியாய்

நான் பார்க்க சட்டென
குனிகிறாயே
நியூட்டனின் மூன்றாம் விதி
அறிந்தாயோ

உன்னால் மயங்கி விழுகிறதென் மதி
அதற்கிணையாய் ஏட்டில் வழிகிறதே
கவி
ஆர்க்கிமிட்டிஸ் தத்துவம் இதுதானா
பயமாய் இருக்கிறது
யுரேக்கா யுரேக்கா என
என்றேனும் ஓடுவேனோ

எழுதியவர் : கவியரசன் (24-May-15, 10:38 am)
பார்வை : 70

மேலே