அ ஃ றினையின் புது உருவம்

சகோதரி வித்யா உன் இழப்பு ஜீரணமாகாத நிமிடங்களுக்குள்...
''அ ஃ றினையின் புது உருவம் ''
பள்ளிப்பூக்கள் இனி
பயணிப்பதெப்படி ?
புங்குடு தீவில் பூவொன்று
கிழித்தெறிய பட்டதில் பூக்களுக்கெல்லாம்
அச்சம்
மூச்சுத் திணற திணற
காமம் திண்ரார்களே இவர்கள்
அ ஃ றினையின் புது உருவமோ ?
ஒரு பட்டாம் பூச்சியின் படபடப்பு
பத்துப்பேரின் பலவந்தத்தில்
மூச்சனைந்ததில் என்ன கண்டார்களோ ?
சமூக சீர்கேட்டின் சூத்திரதாரிகள்
இவர்கள்
சரித்திரம் வாய்பிளக்க
சந்ததிகள் தெறித்தோட
தண்டனைகள் இருந்திடட்டும்
அ ஃ றினையின் உருவங்களை
அடியோடு அறுத்துட்டு எம்
பள்ளிப்பூக்களைப் பாதுகாப்போம்.