மதிப்பெண்கள்
உன் அறிவைப் பார்த்து
ஆச்சரியப்பட வேண்டியவர்கள்..
உன் திறனைப் பார்த்து தூக்கி வைத்து
கொண்டாட வேண்டியவர்கள் ..
உன் சிந்தனைகளைக் கண்டு
சிந்திக்க வேண்டியவர்கள்..
உன் சேவைகளைப் பார்த்து
பண்புடன் பாராட்ட வேண்டியவர்கள் ..
வயிற்றெரிச்சலும் ..
கோபமும்,
பொறாமையும்,
கொள்கிறார்கள் என்றால்
அவர்கள் உனது
வெற்றியை
ஏற்றுக்கொண்டவர்களில்
முதன்மையானவர்கள்..
என்பது
பொருள் ..
எப்படி நீ என்னை விட
அதிக மதிப்பெண் பெற்றாய் ?
அனைத்து தேர்வுகளிலும்?
எனக்கொன்றும் வயிற்றெரிச்சலோ..
கோபமோ..
பொறாமையோ இல்லை..
ஏனென்றால் நான் தேர்வை
சரியாக எழுதவேயில்லை!