சமர்ப்பணம்
சமர்ப்பணம்.
...........................
என் கனவுகளின் கழுத்து நெறித்தீர்கள்
நான் கேட்காத மாலையை என்னில் திணித்தீர்கள் ...
நீங்கள் இட்ட மருதாணி இன்னும் சிவக்கவில்லை
மரித்துவிட்ட என் உணர்வுகளில்
மஞ்சளென்ன குங்குமமென்ன...
என் கண்நீரூற்று இன்னும் வற்றவில்ல
என்றேனும் ஓர்நாள் உங்கள் கால்களை நனைக்கும்
நான் சிறகுகள் வலிக்க வலிக்க பறக்கும் பறவை இப்போது
என் எச்சம் வாசலில் பூத்துக்குலுங்கும்
உங்கள் மாரிலும் மடியிலும் விளையாடும்
நீங்கள் எச்சக்கழிவு சுமப்பீர்கள்
நான் கனவுகளுக்கு உயிரூற்றுகிறேன்