பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறானாய்வு போட்டி - தல புராணம்

" தல புராணம் " - பொள்ளாச்சி அபி

" எழுத்து-எழுத்தாளன் -வாசகம்- வாசகன் " என்பது இங்கே சங்கிலி பிணைப்போடு கூடிய ஒரு உலகம் மற்றும் நீண்ட நெடிய ஒரு ஆனந்தமான ஒரு சிந்தனை பயணம்!

"அறியாமை, சிந்தனை,மூடநம்பிக்கை , மனிதநேயம்,தல வரலாறு என அதில் ஆயிரம் கருத்துகளை கூறாமல்
ப்ரம்மாசதிரமாய் விரைவில் கருத்துக்கள் அறிய சிறுகதையாய் ஒரு அரிய படைப்பு அளித்த எழுத்தாளர்க்கு என் நன்றியை கூற கடமைபட்டுஇருகிறேன்"

எண்ணளவும் எண்ணமுடியாத , வியப்பிற்கும் உரிய தல வரலாறுகளும், கோவில் கட்டிட கலைகளும் , சிற்ப கலைகளும் நம் தமிழ்நாட்டில் உண்டு !
அதில் அனைத்து விதமான அம்சங்களோடு நம் தல புராணம், கருத்துக்களை பன்னீராக அள்ளி தெளிக்கிறது.

குடும்பங்களின் மகிழ்ச்சி திருவிழாக்களில் உறவினர்களோடு கூடும் போது மனம் எண்ணற்ற ஆனந்தம் கொள்கிறது. வேல்முருகன்,இந்துமதி,சீனு,பவித்ரா குடும்பதினரும் எண்ணற்ற ஆனந்தம் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை .
மானிராய்பிறந்தோர்க்கு அன்பு, பாசம், பரிவு,மனிதநேயம் பெற்றிருப்பது சிறப்பு! இங்கு வேல்முருகன்,இந்துமதி தம்பத்தியினர் மனம் ஒரு சேர பெற்றிருப்பது இக்கதையின் சிறப்பு.வயதனா பெற்றோர்களை மதிப்பதே அரிது .ஆனால், யார்? என்றே அறியாத மூதாடியை கவனித்து பணிவிடை செய்தது இனி வரும் சந்ததியரும் கவனிக்க வேண்டிய ஒன்று.
ஊர் பெருமை பேசுவதில் எல்லாருக்கும் தனி விதமான ஆனந்தம் கொள்ளும் என்பது நிதர்சமான உண்மை. ஆனால், அதில் திரித்து கூறி பயன் பெறுவது மனிதனின் ஒரு ஒழுங்கற்ற பண்புக்கு உதாரணம்.
இன்னும் மாந்தர்கள் சிலர் பெண்ணை அவமதித்து, இச்சைக்கு உள்ளாகும் பொருளாக நினைப்பது மாபெரும் தவறு. குடும்பத்தின் ஜோதியாகவும், பாவிகளுக்கு காளியாகவும் அவதரிப்பார்கள் என்பது பெண்களின் சிறப்பு !
இறுதியில் , தன் உருவத்தை கடவுளாக இவ்வூர் மக்கள் வழிபடுவது நினைத்த புரிப்பூம்,தன் வாழ்கை சரியாக அமையாத ஒரு பெண்ணின் வேதனையும் இக்கதையில் அழுத்தமாக ஒரு வரலாறு படைக்க பட்டிருகிறது.

ஐயா,
இந்த கருத்துக்கள் யாவும் என் சொந்த படைப்பே,.
படைப்புகளின் அன்பான வாசகன்,
க.தினேஷ் குமார்

எழுதியவர் : க.தினேஷ் குமார் (26-May-15, 3:11 pm)
பார்வை : 72

மேலே