எங்கேயும் எப்போதும் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி

மனிதன் தன் அனுபவங்களிலிருந்துதான் வாழ்க்கைப் பாடங்களைப் பெறுகிறான். அனுபவங்களே வாழ்க்கை யை சீர்படுத்துகிறது.

சிறப்பான வாழ்விற்கும் தடம் அமைக்கிறது.இதற்குச் சான்றாக பொள்ளாச்சி அபி அவர்களின்" எங்கேயும் எப்போதும் " சிறுகதை மிகவும் எனயும் கவர்ந்தது வியப்பில் ஆழ்த்தியது. 


நான் வாசித்த மற்ற சிறுகதைளை விட பெண் ஆகிய எனையும் ஈர்த்தது. ஏன் எனில் மூன்று விதமான பெண் களின் பாத்திரப் படைப்பில் அவர்களின் வறுமை கஷ்டம் வசதி வாய்ப்பு இவைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது எம்மைப் போன்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமே கதையினை உருவாக்கித் தந்துள்ளார் ஆசிரியர் அபி என்றே சொல்லலாம்.


முதலில் நியூ யார்க் நகரின் கிறித்தவ ர்களான பெண் சாரா என்பவள் ராபர்ட் என்ற ஆண் மேல் நட்போ டு பழகியவிதம் பிறகு அவன் மேல் சந்தேகம் கொண்டு பிரிகிறாள்.

இரண்டாவதாக இலங்கையில் வாழும் பஷீர் எனும் இசுலாமியர் வறுமையின் காரணமாக தன் பெண் ரிசானாவை சவுதிக்கு வீட்டு வேலைக்கு அனுப்பியும் மகள் திருமணத் திற்காக அவள் படும் கஷ்டம் அறிந்தும் மனக் கஷ்டத்தை தாங்கிக் கொள்கிறார்.


அடுத்து இறுதியாக இந்தியாவில் கிராமத்தில் படிக்கும் வயது வந்த பெண்களுக்கு கழிப்பிட வசதியில்லாமல் புதருக்குள் ஒதுங்குவதும் அதனால் அவர்கள் உயிர்க் கொலையில் சிக்குவதும் பெண் கள் நிலையை நன்கு விளக்கிக் காட்டியுள்ளார்.


மேலும் பத்திரிகை செய்திகள் கண்டு மக்கள், " அடக் கடவுளே ! உனக்கு இரக்கம் இல்லையா?என்று எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் அவரவர் கடவுளை எண்ணி மனதுக்குள் அங்கலாய்த்துக் கொண்டு நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும் இருந்தனர் என்று ஆசிரியர் எதிர்பாராது நடக்கும் நிகழ்வுகளை எங்கும் எதுவும் நடக்கும்" என்றே விளக்குகிறார்


. எல்லா நாடுகளிலும் எல்லா மதத்தைச் சேர்ந்த மனிதர்கள் யாவருக்கும் வறுமை ,கற்பழிப்பு ,கொலை ,வன்முறை என நடந்து கொண்டுதான் இருக்கிறது. யாவருக்கும் எங்கேயும் எப்போதும் நடக்கும் என்பதை
ஆசிரியர் நன்கு புலப்படுத்துகிறார்.

எமது சொந்த படைப்பு
அன்புடன்
ஜெயரஜரெத்தினம்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (28-May-15, 2:30 pm)
பார்வை : 259

சிறந்த கட்டுரைகள்

மேலே