சொர்ணாக்கா-கிண்டல் கவிதை

................................................................................................................................................................................................

வெள்ளைக்கார சொர்ணா அக்கா உர்ருன்னு கீறா....
வெளுவெளுன்னு மேட்டர் கேட்டு மீட்டர் போடுறா...
கொள்ளைக்காசு கைக்கு வரல்ல கட்ச்சி தேதிடா...
குமாரசாமி குடாக்கு மவனே கூட்டல் ராங்குடா !

ஆறுபேரை தூக்கச்சொல்ல ஒரு கொலை ஃபிரீடா..!
ஆடிமாச தள்ளுபடி யூஸ்பண்ணிக் கோடா...!
ஊருபட்ட ரௌடிக்கெல்லாம் ரௌடி நானுடா..!
உழைச்சதுக்கு பார்லிமெண்ட்டு போகப் போறேண்டா....!

“கைலிபத்திரி கத்திரி பாமை செட் பண்ணிட்டானா?”
“வைலின்குள்ள பாம் வச்சானாம் வாட்ஸ்அப் ந்யூசுக்கா”
வைலினின்னா இன்னாதுன்னு அக்கா கேக்கறா
வசந்தபவன் நாஸ்தா தான்னு அள்ளக்கை அடிக்கிறான்

பசபசன்னு ஆளை யேத்தி லாரி கொண்டுவா....!
பவர்காட்டி கும்பிடு போட்டு மறைவில் குத்தவா
மசமசன்னு நிக்கா தைய்யே ரூட்டு காமிடா !
மடில கீதே மன்னாரு இது எதோட சாவிடா?

சொர்ணாக்கா கும்பலுக்கு ஸ்வரம் தெரியலயே?
அவங்களோட ஸ்கூல்ல இந்த சிலபஸ் இல்லையே?
வர்ணஜாலம் காட்டும் வயலின் மடியில கீதே....!
விளம்பரஇடை வேளைக்கப்புறம் வெடிக்கப் போகுதே...!

.....................................பூம்ம்ம்ம்ம்ம் ..................................................


................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (28-May-15, 3:11 pm)
பார்வை : 150

மேலே