எப்போதும் காத்திருக்கிறாள்

உடலினுள்ளே வைத்துக்கொண்டு
300 நாட்கள் காத்திருந்தாள்
அவன் முகம் காண.

பின், அலங்காரம் செய்து
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
அவன் வரும்வரை காத்திருந்தாள்
அவனது மழலை சொல் கேட்க.

காசு பணம் திரட்டி
கல்லூரியில் சேர்த்துவிட்டு
அவன் ஆங்கிலம் பேசுவதை கேட்க
அமைதியாய் காத்திருந்தாள்.

பின், அழகிய ஒரு பெண் தேடி
கல்யாணம் செய்து வைத்து
தன் பேரனது வரவுக்காக
கனிவாக காத்திருந்தாள்.

மனமில்லையெனினும்
அவன் மகிழ்வாய் இருப்பானென
மனைவி மகனோடு அமெரிக்கா அனுப்பிவிட்டு
தனியாய் காத்திருந்தவள்
நேற்று காலமானாள்

எதோ விமான கால தாமதமாம்...
இறந்து இரு தினம் ஆகியும்
இன்னமும் காத்திருக்கிறாள்
தன் மகன் கையாலிடும் கொல்லிக்காக.....

எழுதியவர் : மு.ஜெகன். (29-May-15, 2:48 am)
சேர்த்தது : ஜெகன்
பார்வை : 204

மேலே