அர்த்தமுள்ள உளறல்கள்

நள்ளிரவில்
நிழல் ஆகிறது
புரண்டு படுக்கும்
முந்தைய நொடி...
விசும்பலின் நினைவுகளில்
வழிமாறிய
பூனையின் மறதி வீடு...
தாழ்பாள் உடைத்தெறிந்த
கோபத்துக்குள்
ஆடை மீறும் நிர்வாணங்கள்....
கல் விழுந்த வட்டமென
நீண்டும் மீண்டும்
அதே குளம்...
தாமரை பூத்த
தருணம்- தடம் புரண்ட
தண்டவாளத்தோடு
வழி மாறியது சூரியன்...
ஒரு மழை வந்த
புது மாலையில்
என் மொழி தந்த
கவிதை சந்தம்...
முடிவுரை இல்லாமலே
காலியாக கிடக்கும்
வெள்ளைத் தாளில்
ஒரு வாழ்வு-
கை நாட்டு...
கவிஜி