விண்ணில் ஒரு கவிஞன்

மனதில் ரம்மியமான
நினைவோடு..
அந்த தூரத்து கிரகத்தின்
கடற்கரை ஒன்றில்
காலாற நடந்த கவிஞன் ..
நின்றான்..
கண்களை மூடித் திறந்தான்..
எண்ணத்தில் வந்த கவிதை
வெட்ட வெளியில்
அப்படியே டிஜிட்டல் வடிவங்களாய்
தெரிந்ததும் ..
ஆள்காட்டி விரலால்
டிக் செய்ய..
அப்படியே
முழுக் கவிதையும்
அச்சிடப்பட்டது
அந்த கிரகத்தின்
மொத்த ஜனங்களின்
முகநூல்களில் ..
எட்டு கோடி லைக்குகள்
ஒரு நிமிடத்தில் வந்து விழுந்திட..
முகநூல்
தடை செய்யப்பட்டது
இந்த நொடியுடன் என்ற
செய்தியும் தெரிந்தது!
பூமிக்குத் திரும்ப
முடிவெடுத்தான்..
கவிஞன்..!
எழுத்து தளம்
நோக்கி பயணம் செய்தான்!

எழுதியவர் : கருணா (29-May-15, 5:46 pm)
Tanglish : vinnil oru kavingan
பார்வை : 188

மேலே