எனது கிறுக்கல்கள்
இறுதியாக
அழைத்து வந்துக் காட்டினான்
அது மேய்ந்த வயல்களை
அதன் கன்றுடன்
கிரகபிரவேசம்...!!
************************************************
முருகன் பிள்ளையார்
சிவன் விஸ்ணு
இயேசு மாதா
நீங்கள் விரும்பும் தெய்வம்
செதுக்கப்படலாம் அல்லது
உருவாக்கப்படலாம்
அவன் மனது வைத்தால்
அவன் வயிறு நிரப்பபடலாம்
அல்லது கலை பாதுகாக்கப்படலாம்
நீங்கள் மனது வைத்தால்...!!
***************************************************
காதல் தோல்வி
டிஆர் பரம ரசிகன்
கான்கிரீட் காடுகளுக்குள்
தொலைத்துவிடப்பட்ட
நவீன சித்தன்
இவற்றுள் எந்த
காரணுமுமாக
இருக்கலாம் இல்லாமலும்
இருக்கலாம்
அது என்னுடைய
வெறும் தாடி அவ்வளவே...!!
**********************************************