கௌசல்யா-ஒரு தொடர்கதை-4

மறு நாள் காலையில் என் எண்ணமெல்லாம் அவள்தான் அவளைத்தேடி திரிந்தேன் .
எதற்காகவென்று எண்ணம் எங்கும் அவள் நினைவுகள் .....
வழியெங்கும் தேடியும் காணவில்லை .என்ன செய்வதென்று தெரியவில்லை
கடற்கரைக்கு சென்றேன் .அங்கு அமர்ந்து கொண்டிருக்கையில் ஒரு குரல் கேட்டது
ஐயா !சுண்டல் வேணுமா என்று நான் திரும்பி பார்த்தேன் அது என் கௌசல்யா ...
என்னை கண்டதும் அவள் விலகி ஓடினாள்.கௌசல்யா நில்லு ..நில்லு கௌசல்யா ..
எதற்காக என்னை கண்டதும் விலகி ஓடுகிறாய் ..நான் என்ன தெரியாதவனா !
இல்லை தெரிந்து கொள்ளவிருப்பம் இல்லையா ...
கௌசல்யா :அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்னால் உனக்கு என் தொந்தரவு
குமார் :தொந்தரவா ....என்ன சொல்கிறாய் ..எனக்கு ஒன்றும் புரியவில்லை ...
கௌசல்யா :விபத்து நடந்த அன்று உன்னை மருத்துவ மனக்கு கொண்டு வந்த பிறகு
உன் தந்தை என்னை பற்றி விசாரித்தார் நம் காதலை பற்றியும் உன் நண்பர்களிடம் விசாரித்து
விட்டு என்னை அழைத்து பேசினார் ..
குமார் அப்பா : கௌசல்யா...என் மகனை விரும்புகிறாயா ..
கௌசல்யா :ஆம் !...என்றேன் ...
குமார் அப்பா :உன் தந்தை யாரு ? என்ன தொழில் செய்கிறார் ...என்னோட தகுதிக்கு
ஒத்து வருமா ..
கௌசல்யா :ஐயா !குமாரு நானும் காதலிக்கிறோம் .இரண்டு பேறும் ஜாதி , மதம் பார்த்து
காதலிக்கலை ..மனச பார்த்து தான் காதலிச்சோம் ...பணதவச்சி பேசி எங்க காதல கொச்ச
படுத்தாதீங்க !
குமார் அப்பா :காதலா...பாசமா ......இல்ல சுகத்துக்கு ஆசைப்பட்டு இந்த மாதிரி பெர்ய இடத்து
பையன மடக்கி போட்டா காசு பாக்கலாம்னு நனச்சாயா....
என் மகனை நீ இனிமே பார்க்க கூடாது அதுக்கு விலை எவ்வளவு ....சொல்லு ...
கௌசல்யா :ஐயா !நாங்க எழ தான் அதுக்காக இப்படி மனமில்லாம வளர கூட்டம் இல்ல
உங்க பணம் ,காசு நிரந்தரம் இல்லையா ,அது ஒன்னு பண்ணது பணம்தான் முக்கியம்னா
நீங்க ஒரு பொண்ண கல்யாண பண்ணாம பணத்த கல்யாணம் பன்னிருகனு ...இப்படி ஒரு
வாழ்கை எனக்கு தேவையே இல்லை கூப்பிட்டு வச்சி பேசினதற்கு நன்றி வரேன் ...
இல்லை இனிமே உங்க முன்சிலையே முழிக்க மாட்டேன் .....(தொடரும் )