விரிசல்கள் - 12248
கொடுத்த பணத்துக்கு
பாதி ரசீது......
மீதி எங்கப்பா ?
ஸ்கூலுக்கு சேர்க்க வந்தபோது
குழந்தை கேட்டது.......
இப்படியும் திருடலாம்
இது உன் முதல் பாடம்........
என்றேன்.....
அப்போ
அறம் செய்ய விரும்பு அப்படின்னு
அவ்வைப் பாட்டி சொன்னது என்னாச்சி
என்றது குழந்தை.......
ஆத்திச் சூடியை மறந்து விடு
அபாகசை தொடர்ந்து விடு.......
சரி அப்பா......
நீ என்னை சரியான வழியில்தானே அழைத்து செல்கிறாய்
என்றது குழந்தை......
எனக்கு ஆபீசுக்கு நேரமாயிட்டு......
ஏதாவது கேள்வி இருந்தா
உன் அம்மாட்ட கேளுன்னு.....
நழுவி ஓடினேன் நான்........

