ஆசானே தெய்வம்
ஆசான் தன்னை மதித்திடுக .
ஆசான் சொல்லைக் கேட்டிடுக .
ஏசாப் பண்பும் எட்டிடுமே .
எல்லாப் புகழும் ஆசானே .
கல்வி யறிவு தந்திடுவான் .
கற்கும் காலம் வகுத்திடுவான் .
எல்லை யில்லாப் புகழுடனே
என்றும் நம்மை வளர்த்திடுவான் .
அறிவு தந்த ஆசானின்
அகத்தைக் குளிரச் செய்திடுவோம் .
தெளிவு தன்னை எந்நாளும்
தெரிந்து சொல்லித் தந்திடுவான் .
காலை வேளை கற்றிடுவோம் .
கல்வி யதனை பெற்றிடுவோம் .
மாலை வேளை வந்தாலும்
மனது லயக்கக் கற்றிடுவோம் .
சேத மிதனில் இனியில்லை .
செல்வம் தாமே வந்துவிடும் .
இரவும் பகலும் இனிநாமே
இயன்ற வரையில் கற்றிடுவோம் .
அகவை யில்லை பயில்வதற்கு
அகமும் முகமும் மலர்வதற்கு .
விரைந்து வாரீர் கற்பதற்கு
விழச் செய்வோம் களர்நிலத்தை .
இருண்ட வீட்டை மாற்றிடுவோம்
இல்லை கல்லா ரினியில்லை.
புதிய உலகம் படிப்பதற்கு
பாட சாலை போந்திடுவோம் .
மகளி ரெல்லாம் கல்விதனை
மாந்தும் நிலைக்கு வந்துவிட்டால்
குடும்பம் முழுதும் பேரின்பம்
குடும்ப விளக்கை ஏற்றிடுவோம் .
கண்ணில் காணும் தெய்வத்தை
கல்வி கொடுக்கு மாண்டவனை
பண்ணில் போற்றிப் பாடிடுவோம் .
பக்தி யினாலே தொழுதிடுவோம் .
நம்மின் கண்கள் ஆசானே .!
நம்மின் கலைகள் ஆசானே !
நம்மின் உயிர்ப்பு ஆசானே !
நம்மை வாழ்த்தும் ஆசானே !

