இமைகளின் கண்ணீர்த்துளி 555

என்னவளே...

உன் கண்ணீர் துளிதான்
எவ்வளவு கொடுத்து வைத்தது...

உன் கண்களில்
பிறக்கிறது...

உன் அழகிய
கன்னங்களில் வாழ்கிறது...

உன் உதடுகளில் கண்ணீரின்
வாழ்வை முடித்து கொள்கிறது...

பிறந்திருக்கலாம் நானும்...

உன் கண்ணீரை தேங்கி
நிற்கும் இமைகளாய்...

உன் நெஞ்சுக்குள் இருந்து
வெளிவரும் வெந்நீரின்...

கண்ணீரை தாங்கும் சக்தியாவது
எனக்கு கிடைத்திருக்கும்...

இமைகளாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (31-May-15, 4:08 pm)
பார்வை : 409

மேலே