வாழ்க்கை கல்வி

வாடா காபி சாப்பிடுறா....
நண்பனின் உபசரிப்பு நாவினில் மட்டும்

வா தம்பி எப்ப வந்த ஊர்ல இருந்து?
கேட்டுவிட்டு பதிலை எதிர் பார்க்காமல்
போய்கொண்டே இருக்கும் பக்கத்து வீட்டுக் காரர்

வாப்பா என்ன விஷயம்
விஷயம் இருந்தால்தான் வீட்டுக்கு வரணும் என்று
விரட்டுகிற அண்ணி...

சின்னவனுக்கு காச்ச சீரழியுது என்குடும்பம்
சீரெட்டு வாங்கக் கூட காசில்ல....
பொறுப்பற்ற சகோதரனின் வெறுப்பேற்றும் வார்த்தைகள்

பாடய்ல நான் போறதுக்குள்ள
படிப்ப நீ முடிச்சிடுவியா?
என் எதிர்காலம் பற்றிய பயத்தில்
பாவம் தான் அப்பா..

ஊர்ல இருந்து வந்து
உம்முன்னு ஏன் ராசா இருக்க
வேருக்கு வெருக்குன்னு இருக்குதா அய்யா
வெளிய எங்காச்சும் போறியா அய்யா?

முடிந்து வைத்த சுருக்குப் பையை
ஆள்காட்டி விரலால் துலாவிய படி
அம்மா மட்டும் என் முன்னால் அனுசரணையாக.....

வெளியூர் போய் படிகிரதெல்லாம் பெரிய படிப்பில்ல...
விடுமுறையில் வீட்டுக்கு vandhu பாருங்க....
அப்பக் கிடைக்கும் அத்தியாவசியப் படிப்பு.....

எழுதியவர் : தேனி ரானா jegadeesh (31-May-15, 9:26 pm)
சேர்த்தது : ரானா
Tanglish : vaazhkkai kalvi
பார்வை : 168

மேலே