என் தெய்வம் அம்மா - உதயா

நான் பிறந்ததது முதலே
தந்தை முகத்தினை
தாயின் உழைப்பில் மட்டுமே
கண்டவன்..

நான் தந்தையை
கண்டதும் இல்லை
நான் பிறந்து
தந்தையை காணும் வரை
காலன் அவனை
விட்டும் வைக்கவில்லை ...

என் உறவுகள் என்னை பார்த்து
அப்பனை முழுங்கியவனென
ஜாடமாடையாக கொட்டி தீர்ப்பதால்
அம்மா என்னை அழைத்துக்கொண்டு
பக்கத்து கிராமத்துக்கு குடியேறிவிட்டாள்...

நான் தலையை சுற்றி
என் வலது கையினால்
இடது காதினை தொட்டுவிட்டதால்
என்னை அரசு பள்ளி ஆசிரியர்கள்
ஒன்றாம் வகுப்பு சேர்த்துக் கொண்டனர் ...

அம்மா கிராமத்தில் கூலி வேலைக்கு சென்றுதான்
நோட்டு பேனா துணிகள் வாங்கி தருவாள்
அதோட தினமும் வேளைக்கு சென்றால்தான்
எங்கள் வயிற்று சூரியனுக்கு சற்று ஒய்வு கிடைக்கும் ...

நான் ஆறாம் வகுப்பு பயிலும் போது
நல் மதிப்பெண் பெற்றதுக்கு
அந்த ஆண்டி இறுதியில்
விழா மேடையில் பரிசொன்று
பெற்றதோடு மருத்துவர் ஆவதே
ஆசையென கனவினையும் சிறகாய் விரித்தேன்...

என் கனவுச் சொல் என் தாயிக்கு வேதமாகி போனது
அவள் உழைத்து உழைத்து சேர்த்த பணத்தினில்
கல்லூரி படிப்பினில் இரண்டு வருடத்தினை கழித்து விட்டேன்
மூன்றாம் வருடம் பணம் கட்ட அவள் இரவு நேரத்திலும்
வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டால்

ஒருநாள் கல்வொன்று கால் மீது விழுந்து
அவள் கால் எலும்பு முறிந்து போனது
ஓய்வெடுத்தால் எங்கு மகனின் கனவு
கலைந்துவிடுமோயென எண்ணியே
ஓய்வை வெறுத்தாள் உழைப்பை தொடர்ந்தாள்

பணியின் பளுவினால்
காலில் இரத்தம் கசிந்து சொட்ட சொட்ட
வலியினையும் மறந்து அவள் உழைத்த உழைப்பு
சக உழைப்பாளியின் கண்ணில் இரத்தத்தினை
வடிய செய்தது ...

ஒரு வழியாக நான் படிப்பினை
முடித்து விட்டு நல் பணியிலும் சேர்ந்துவிட்டேன்
என் தாயினை பார்க்க ஆசையோடு
என் கிராமத்திற்கு சென்ற பின்பு தான் தெரிந்தது
அவள் இறந்து ஆறு மதங்கள் ஆகிவிட்டதுயென ..

அக்கம் பக்கத்தினர் சொன்னார்கள்
எனக்கு நான்காம் வருடம் பணம்
கட்டும் நேரத்தில் என் தெய்வத்திற்கு
காய்ச்சல் வந்து விட்டதாம்..

அந்த காய்ச்சலிலும் அவள்
நடவு செய்யும் வேலைக்கு சென்றதால்
அவளுக்கு ஜன்னி பிறந்து விட்டதாம்

அவள் மரணப் படுகையில் இருக்கும் போது
ஊரார்யிடம் சொல்லி வைத்தது
ஒருவேளை நான் செத்து விட்டாள்
என் மகனுக்கு சொல்ல வேண்டாம்
அவனுக்கு தெரிந்தால் அவன் கண்ட கனவு
கனவாகவே போய்விடும் என்று..

இரவும் பகலும்
வெயிலிலும் மழையிலும்
முள்ளிலும் சேற்றிலும்
ஓடி ஓடி உழைத்த ஜீவன்
கடைசியாய் என் முகத்தினை
பார்க்காமலே கல்லறையை சேர்ந்துவிட்டது..

ஐயோ அம்மா அம்மா
என்னை பாருமா
******************
நான் கண்ட கனவினை
நினைவாக்கி பார்க்கவே
நித்தமும் நீ நொந்து இன்று
மண்ணுக்குள்ள போய்விட்டயா

ஐயோ அம்மா
நான் கண்ட கனவுதான்
நினைவாகி போனதே
வரம் கொடுத்த ஆத்தாவே
நீ வானுலகம் போய்விட்டயா
******************
இது போல் இன்னும்
என் கவியில் சொல்லப்படாத
தாய்களின் தியாகமும்
மகன்களின் கதறலும்
எண்ணில் அடங்காதவை..

நான் எத்துனை கவி படைத்தாலும்
அம்மா அவளின் தியாகத்திற்கு ஈடாகுமா ???
அவள் தியாகத்திற்கு தலைவணங்கி
கண்ணீருடன் முடிக்கிறேன் என் கவியை...

எழுதியவர் : udayakumar (1-Jun-15, 7:49 pm)
பார்வை : 600

சிறந்த கவிதைகள்

மேலே