இறுதி சந்திப்பு
இன்று(21/12/12)உலகம் அழியப்போவதாக தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும் பல ஊடகங்களிலும் பரப்பிக்கொண்டிருந்தார்கள்
சில மனிதர்கள் மாயன் காலன்டரைப் பற்றி பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள் சிலபேர் மாயன் காலன்டராவது மைராண்டி
காலன்டராவது போய் ஆகுற வேலைய பாருங்கடா வெண்ணைகளா என்று கூறினர் நானும் அவர்களுள் அடக்கம்
என்னைப் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை அப்படி இருந்தாலும் கூறுவதற்கு என்னிடம் நேரம் இல்லை
ஏன் என்றால் இன்னும் ஒரு மணி நேரத்தில் எனக்கு ஆங்கில தேர்வு நடக்கவுள்ளது அதற்குள் படித்தாக வேண்டும்
புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன் படிக்க முடியவில்லை காரணம் அவளுடைய கண்கள் என் மனக்கண்ணில் வந்து என்னை இம்சித்தது
புத்தகத்தை மூடி வைத்து விட்டு நேரம் ஆனது கூட தெரியாமல் அவள் கண்களை ரசித்துக்கொண்டிருந்தேன்
சே! என்ன கண்ணுடா அவளுக்கு அப்படியே பசும் பாலில் போட்ட திராட்சை மாதிரி அவளிடம் இன்று எப்படியாவது propose
பண்ணிடனும் என்று நினைத்தவாறே கடிகாரத்தை பார்த்து அதிர்ந்தேன் இன்னும் கால் மணி நேரம்தான் இருந்தது அவசர
அவசரமாக கிளம்பி பள்ளியை அடைந்தேன் பாதி தேர்வு எழுதிருப்பேன் திடீரென கட்டிடம் ஆட ஆரம்பித்து
பூகம்பமாக வெடித்தது நான் அறையின் வாசல் அருகில் அமர்ந்திருந்ததால் உடனே சுதாரித்து வெளியே ஓடினேன்
நான் ஓடியதுதான் தாமதம் நான் இருந்த கட்டிடம் இடிய ஆரம்பித்தது மாணவர்கள் அனைவரும் கிடைத்த திசைகளில் சிதறி ஓடினர்
அப்போதுதான் அவள் ஞாபகம் வந்தது அவள் வகுப்பறையை நோக்கி ஓடினேன் அவளும் என்னை நோக்கி ஓடிவந்துக்கொண்டிருந்தாள்
நானும் அவளும் நெருங்குவதற்கு சில மீட்டர் தூரம் இருக்கும் எனக்கும் அவளுக்கும் இடையே பெரிய பள்ளம் உண்டாகியது
அவளை பார்த்த ஆவலில் நான் பள்ளத்தை கவனிக்கவில்லை நான் சுதாரிப்பதற்குள் பள்ளத்திற்குள் தடுமாறி விழுந்தேன்
அவள் முகத்தை பார்த்த படியே அவள் பெயரை சொல்லி கத்தியவாறே பள்ளத்திற்குள் சென்று கொண்டிருந்தேன்
நான் விழுவதை கண்ட அவளும் என் பெயரை சொல்லி கத்தியவாறு பள்ளத்திற்குள் குதித்தாள் பள்ளத்தின் அடியே உள்ள நீரில் சொத்தென்று விழுந்தேன்
என்னை தொடர்ந்து அவளும் நீரில் விழுந்திருக்கிறோம் ஆனால் நீரில் விழுந்த உணர்ச்சியே இல்லை என்று
நினைத்துக்கொண்டிருக்கும் போதே என் முகத்தில் நீர் பட்ட உணர்ச்சி பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்தேன்
என் அம்மா கையில் சொம்போடு நின்று கொண்டிருந்தாள் ஏன்டா மூதேவி இன்னைக்கு இங்கிலீஷ் பரிட்சையை வச்சுக்கிட்டு என்னடா
தூக்கம் வேண்டி கிடக்கு என்றவாறே உள்ளே சென்றாள் நான் ஏதோ பிரம்மை பிடித்த மாதிரி அமர்ந்திருந்தேன்
-----அபு