கயல்விழி வருவாளா

கயல் விழியின்
கரம் பிடித்து
காதல் வானில்
பறந்தேன் ...

கடற்கரை மணலிலே
கனவுகளோடு
காதலியின் கரம் பிடித்து
காளார நடக்கையிலே
காலன் சுனாமி வடிவில்
கடலலை இழுத்ததோ
கயல்விழியை
காணவில்லை ....

காலங்கள் ஓடின
கயல்விழி வருவாள் என்று
காத்திருக்கும் காதலன்
கடற்கரையில்...

எழுதியவர் : கவியாருமுகம் (1-Jun-15, 5:08 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 125

மேலே