கோடை மழை

மர கிளைகளின் ஊடே மழை துளிகள் வேகத்துடன் இறங்கும்
ஆவியாய் போன பிரிவு கழிந்து பூமியை கட்டி அணைக்கும்

சுமை இறக்கி லேசான மேகங்கள் கருமை நிறம் மாறும்
காதல் வானத்தின் நிறம் கொண்டு இரண்டற கலக்கும்

கலாட்டா கூட்டம் நடத்தி கொண்டிருந்த காகங்கள் கூட
நீர் துளிகளை சிதற விட்டபடி பரபரப்புடன் ஒதுங்க இடம் தேடும்

மண்டை பிளக்கும் வெயிலின் நடுவே கோடைமழை வந்து
மயக்கும் மண் மணக்கும் நிலைமையை சீராக்கும் ஜோராக்கும்...

எழுதியவர் : கார்முகில் (1-Jun-15, 6:18 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : kodai mazhai
பார்வை : 196

மேலே