கரை புரண்ட வெள்ளமாய்
கண் இமை வழியாக
திரை இட்ட கண்ணீர்த்துளிகள்
கடல் தொட்டன
கரை புரண்ட வெள்ளமாய்!
அலைகள் நெஞ்சில்தான்
ஓயாத தொல்லைகள்
உன்னால்தான்!
வாய்விட்டு கதற
வார்த்தைகளில்லை!
ஆறுதல் கூற
ஆட்களுமில்லை!
சிறையிட்டு என்னை
மறைந்திட்ட உன்னை
ஆணையிட்டு தடுக்கவும்
அறைவிட்டு தட்டிக் கேட்கவும்
முறையிட்டு வருந்தவும்
நாதியற்ற ஜென்மமாய்
நீதியற்று விட்டுவிட்டாய்!
கரை புரளும்
கண்ணீர் அலைகள் உன்
மன அறைக்குள்
புகவில்லையே
இதயத்தை யாருக்கு
விற்றாய்...?