300 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு
அண்ணே நீங்க இடைத் தேர்தல்ல சுயேச்சையாத் தானே நிக்கறீங்க எதுக்கு 300 பேர் கொண்ட தேர்தல் களப்பணிகக் குழு அமைச்சிருக்கறதா செய்திதாள்களிலே அறிக்கை வெளியிட்டிருக்கறீங்க?
அதுதாணடா இந்தத் தாண்டவராயனின் ராஜ தந்திரம்.
எனனண்ணே சொல்லறீங்க?
இந்த அறிக்கை பெரிய கட்சிகளின் வயித்தலே புளியக் கரைக்கும். அதுல்ல ஏதாவது ஒரு கட்சி தேர்தல் நாளுக்கு சில நாட்களுக்கு முன்பு என்ன பாத்து வாபஸ் வாங்கச் சொல்லி வற்புறுத்தி நல்லா கவனிப்பாங்க. நானும் தேர்தலுககு 2 நாளுக்கு முன்பு அவுங்க கட்சிக்கு ஆதரவா வாபஸ் வாங்கறதா அறிக்கை வெளியிடுவேன். அது எலலா பேப்பரலெயும் போடுவாங்க. தொலைக் காட்சியிலெயும் ஒளிபரப்பாகும். அவுங்களுக்கு என் அறிக்கையாலே 2000 அல்லது 3000 ஓட்டு கூடுதலாக் கெடைக்கும். எனக்கும் எந்த நட்டமும் இல்ல.