குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் -1

அந்த மங்கலான
விளக்குகளின் வெளிச்சத்தில்..
மதுக் கடலில்..
புகையும் சிரிப்பும்
சுருள் சுருளாக ..
நண்பர்கள் நடுவில் இவன்!

இடையில் வந்த
கைப்பேசி சத்தம்
இரண்டு முறையும்
கேட்கவில்லை..
அத்தனை கூச்சல்
நண்பர்கள் ஆரவாரம்..
இவனது பதவி
உயர்வுக்கான விருந்து!

தள்ளாடி.. தள்ளாடி..
ஒரு வழியாய்
வீட்டுக்கு வந்து சேர்ந்து
எடுத்த வாந்தி மயக்கத்தில்
போதையோடு..
எட்டி உதைத்த கதவு..
திறக்க மறுத்திட..
பக்கத்தில் வந்த
பக்கத்து வீட்டுக்காரர்
தகவல் தந்தார் ..
..
ஆம்புலன்சில் விரைந்து
எடுத்து வந்தாலும்..
அவன் மனைவியும்
குழந்தையும் ..
வழியிலேயே
இறந்து போன செய்தி
கேட்டதும்..
போதை தெளிந்தது..
குரல் உடைந்தது..
இவனுக்கு..
..
கைப்பேசி எடுத்து பார்க்க..
மிஸ்டு காலில்
இரண்டு முறை
பக்கத்து வீட்டுக்காரர்
கைப்பேசி எண்..
..
கண் கெட்டு விட்டாயிற்று ..
இனி சூரிய நமஸ்காரம்தான்!


# SUPPORT NANDHINI #
(நன்றி: சரவணாவின் உந்துதலுக்கு)

எழுதியவர் : கருணா (2-Jun-15, 9:32 am)
பார்வை : 439

மேலே