எரிதழல் வீழின் -1 கார்த்திகா
//பெண்ணே !
விழிப்பாய் இரு ...
உறங்கும்போது கூட விழிப்பாய் இரு ...
ஏனென்றால் ,
நீ தூங்கும்போது
உன் இடது மார்பகத்தை ஒருவனுக்கும்
வலது மார்பகத்தை ஒருவனுக்கும்
பங்கிட்டுக் கொடுக்கக் கூட
இந்த உலகம் தயாராய் இருக்கிறது!....//
எப்போதோ எங்கேயோ படித்த வரிகள்...படித்த புத்தகம் ,எழுதியவர் யாரும் நினைவில் இல்லை....
ஒவ்வொரு வன்புணர்வின் வக்கிரத்தைக் கேட்கும்போதும் அழுதுகொண்டே இந்த வரிகளை சொல்லுகிறேன்.............ஏகாதிபத்தியம் முதுகெலும்பு உடைத்து வீழும்போது வெறியோடு கத்துகிறேன்.....
"அவர்களை விட்டு விடாதீர்கள்!"
என் கண்ணீர்த் துளியை இரையாக்கி நீ வாழ்வாய் என்றால் தினம் ஒரு சாவை வேண்டுகிறேன்..........
உறக்கத்தை மென்று என் புலன்களை வெற்றுச் சதையாக்கி உயிர்த் துடிப்பில் நடு நடுங்கிய பொழுதுகள்...
அந்த நாட்களில் புத்தகங்கள் என்னை மூழ்கடித்திருந்தன.....
ஜெய காந்தனும் இந்திரா சௌந்தர் ராஜனும் கல்கியும் ராஜேஷ் குமாரும் பாலகுமாரனும் இன்னும் பலரும் தந்தை படிக்க ஆவலாய் தொடர்ந்த பொழுதுகள்....தெரிந்ததை விட புரிந்து கொண்டவை இன்னும் நெருக்கம் தந்தன பதின் பருவத்தின் தொடக்கத்தில்....
பணிச் சுமைகளுக்கு இடையில் வாசிக்க மறந்த தந்தை புத்தகங்கள் வாங்க மறக்கவில்லை....பின்னாளில் மடிக்கணினியும் அலைபேசியும் கொண்டு கரங்களை விலங்கிட்டுக் கொண்டபோது என் பொன்னியின் செல்வன் ஆழ்ந்த உறக்கம் கண்டது.....மீட்டிப் பார்க்காத ருத்ரவீணை தந்தியில் தூசி படிந்து!
தினம் கதை சொல்லிய இதிகாசங்களை இன்று தொலைக் காட்சியில் காணும்போது சிறு நெருடல்....நானூறு ஐநூறு பக்கங்களைப் புரட்டிவிட்டு தலைவலியால் துடித்ததற்கு இப்போது நல்ல பலன் பரீட்சைக்கு முந்தய நாட்களில்....
இத்தனை நாட்கள் கடந்த பின்னரும் ஞாபகத்தில் சொற்கள் புதைந்து இருக்குமென்றால்?பாதிப்பு.......................தொடரும்....