இருபதாயிரம் போஸ்டர் ஒட்டிய தமிழக காவல் துறை ஆனால்

இருபதாயிரம் போஸ்டர் ஒட்டிய தமிழக காவல் துறை....? ஆனால்...

சென்னை தலைமைச் செயலக காலனி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் தினேஷ். வங்கி ஊழியரான தினேஷும், சூளை தட்டண்ணா தெருவைச் சேர்ந்த அருணாவும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தினேஷின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
இதனால், தாயாரும் மருத்துவமனை சென்று விடவே வீட்டில் இருந்த தனிமையைப் பயன்படுத்தி, காதலியை அழைத்து வந்துள்ளார் தினேஷ்.

ஆனால், திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் அருணாவைக் கொலை செய்தார் தினேஷ்.

சடலத்தைக் காரில் கடத்த முற்பட்ட போது அக்கம்பக்கத்தாரிடம் சிக்கினார் தினேஷ்.
பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய தினேஷ், மருத்துவமனைக்குச் சென்று தனது தாயாரைச் சந்தித்து விட்டு தலைமறைவானார்.

கிட்டத்தட்ட சம்பவம் நடந்து 3 மாதங்களாகும் நிலையில், தினேஷின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

எனவே, தினேஷ் குறித்த தகவல் அறிந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கும் படி 20 ஆயிரம் போஸ்டர்களை தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

ஆனால் தற்போதைய நிலையில் யாருமே சுவற்றில் ஒட்டிய / ஒட்டும் போஸ்டர்களை பார்ப்பதே இல்லை....பெரும்பாலும் செல்போன்களை குனிந்து கொண்டே நோண்டிக் கொண்டிருப்பார்கள்....

சரி போகட்டும்..போஸ்டர் ஒட்டி விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கணக்கு காட்டும் படலமாக இருக்குமோ...? என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்..!

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (3-Jun-15, 12:02 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே