விண்மீன் விதையில் கவியாய் முளைத்தேன்

நிலாமங்கை
நித்தம் பறிக்க
வானம் பூக்கும்
வைர பூக்கள்...

யார் தூவிச் சென்றார்களோ
வானப் பெண்ணின் மேனியெல்லாம்
வண்ண ஜிகினாவை...

இரவு வீதிகளில்
வானம் போடும்
தெருவிளக்குகள்...

பூனை நடையில்
வான் அளக்கும்
மதியவளின் விசிறிகள்...

என் கவிவலையில் மட்டும் சிக்கும்
இரவுக்கடலில் நித்தம் நீந்தும்
வைர மீன்கள்...

வானம் எழுதும்
இரவு கவிதையின்
வண்ண வண்ண எழுத்துக்கள்...

விடியல் வந்து திருடிச்செல்லும்
வானம் சேர்த்து வைத்த
வைர காசுகள்...

வான் கடலில்
இரவில் குளிக்கும்
ஜொலிக்கும் நங்கைகள்...

வான வயல்களில்
இரவு தூவிய
என் கவிதயின் விதைகள்..

எழுதியவர் : மணி அமரன் (3-Jun-15, 9:16 pm)
பார்வை : 146

மேலே