எண்ணெயில் வறுத்த மாதிரி ஓர் உணர்வு - உதயா

"நண்பா இதுலா தப்புடா
அவங்களும் நம்ப சகோதரி மாதிரிதான்
உன் கூட பொறந்தவங்களா இருந்தா
இப்படி நெனைப்பியா இப்படி பேசுவியா"
என நான் கேட்டபோது ..

"தோடா புத்தரு சொல்லிடாரு
எல்லாரு கேட்டுங்கடா ..
போடாடேய் வெங்காயம்"
என என் சொற்களை உதறிவிட்டு
தொடர்கிறது சாலையில் செல்லும்
பல பெண்களை பார்த்து
அவங்களின் கேவலமா வர்ணனைகள்

இதனாலே நான் பல நேரங்களில்
தனிமைக்கும் மட்டும்
நண்பனாக இருக்கிறேன் .

என் தனிமையின் சில நேரங்களை
கடன்வாங்கிக் கொள்வாள் என் தோழி

அவள் பெயர் பிரியா
இவள் என் உயிர் தோழி
என் தாயிக்கு இணையானவள் ..

அவள் இன்று என்னிடம் கேட்டாள்
" உதயா ஏன்டா இந்த பாய்ஸ்லா
இப்படி இருக்காங்க ..
ரோட்டுல நடந்து போகும் போது
அவங்க பாக்குற பார்வையும்
அவங்க கமெண்ட் பேருல
சொல்லுற வார்த்தையும் இருக்கே ..

அப்படியே மிகாய் தூள
அவங்க கண்ணுல போட்டு
கத்தி எடுத்து குத்துனும் டா..
கல்லாலே அவங்க நாக்க
நேசுக்கியே அருக்கனும் டா ...

பஸ்ல போறப்போ
கிட்ட வந்து ஒரசி
கழுத்துகிட்ட அவங்க விடுற
மூச்சி இருக்கே ..

அப்படியே அவங்கள
நடு ரோட்டுல
நிர்வாணமா நிக்க வச்சி
பெட்ரோல் ஊத்தி கொளுத்துனும் டா.."

என கண்களில் தீயோடு
கைகளின் ருத்ர தாண்டவத்தில்
சொல்லி முடித்துவிட்டு
சாந்த நிலைக்கு திரும்பி
வழக்கம் போல்
என் தோளில் சாய்ந்து
எதையோ சிந்தித்தாள்..

அவள் சொற்கள் அனைத்தும்
முட்களாக மாறி
என்னுடலை குத்தி
எண்ணெய் கொப்பரையில்
வறுத்து எடுத்த மாதிரி
ஓர் உணர்வை
என்னுடல் உணர்ந்தது
நானும் ஒரு ஆண்யென்பதால் ...

எழுதியவர் : udayakumar (3-Jun-15, 9:31 pm)
பார்வை : 406

மேலே