போதவில்லை
வானம் பார்த்த பூமியில்
விவசாயி ஏர் பிடித்து
வயல் வெளியை
பண்படுத்தி நாற்று நட்டு
வரப்பு அமைத்து
வடிகால் வெட்டி
நீர் பாயிச்சி களை பறித்து
பயிர் வளர காத்திருக்கையில்
மழை பொய்த்து பயிரும்
காய்ந்தது வயலும்
வறண்டது வழங்கிய
நிவாரணமும் அவன்
ரணத்தை போக்ககூட
போதவில்லை ..