அமுதென்று தான் பேர்

அமுதென்று தான் பேர்
===========================================‍===ருத்ரா

எத்தனை தடவை தான்
நகம் கடிப்பாய்?
அகக்கடல் ஆழ்ந்து
நங்கூரம் பாய்ச்சி
உன்னைச்சூழ்ந்த‌
அலைச்சுருள்களைக்கூட‌
ஜரிகையாக்கி படபடத்து
பறக்க விட்டுக்கொண்டிருக்கிறாய்.
என் கேள்விக்கு பதில்
அந்த நகவளைவுகளிலா இருக்கிறது?
கடித்து துப்பினாலும்
அந்த மாணிக்கக்கற்களை அடுக்கினால்
அண்டைத்தீவுக்கும் பாலம் கட்டி விடலாமே.
காலத்தின் பிஞ்சுளான
அந்த அமுத தருணங்களை
நீ சுவைக்கும் போது
நான் எறிந்த சொல்லையும் தானே
சுவைத்துக்கொண்டிருப்பாய்.
பதிலுக்கு அவசரமில்லை.
காத்துக்கொண்டிருக்கிறேன்.
சுவைத்துக்கொண்டேயிரு.
தமிழுக்கு மட்டும் அல்ல‌
உன் இதயத்துள் விழுந்திட்ட‌
அந்த‌
நம் சொல்லுக்கும் அமுதென்று தான் பேர்!

========================================================

எழுதியவர் : ருத்ரா (4-Jun-15, 2:44 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 69

மேலே