திரும்பி பார் அன்பே
நீ கோபம் கொண்டாலும்
அந்த கோபத்தில் ஒரு குழந்தை கண்டேனே
நீ காயம் தந்தாலும் அந்த
காயத்தில் இதயம் வரைவேன்
உன் வரி குதிரை உதட்டில்
வண்ணம் தீட்டும் போது
என் எண்ணம் மாறி போக கூடும்
ரோபோ நடையில்
ராயல் உடையில்
உலர்ந்து போகிறேன்
உன் சேட்லைட் பார்வையில் தப்பி பிழைத்தேனோ
உன் முகநூல் வார்த்தையோடு அரட்டை அடிப்பேனோ
உன் கோபத்தில் dts அதிரும் அடி
என் வாழ்க்கைக்கான தேடலில்
உன் பெயரே என் மன கூகுலில்
தட்டச்சு செய்து பார்க்கிறேன்
3ஜி வேகத்தில் இதயத்தை துடிக்க விடு
வாட்ஸ் அப் வேகத்தில் காதலை சொல்லு
தொழில் நுட்பத்தால் தூலி செய்து தாலாட்டு
இயற்க்கை கூட ஏதோ ஒரு அலங்காரம் பெற்று இருக்கும்
இரவு வானுக்கு நட்ச்சத்திரம் அலங்காரம்
கடல் மட்டத்திற்கு அதன் அலைகள் அலங்காரம்
அலங்காரம் அற்ற உன் முகம்
இவைகளை விட அழகு அன்பே