ஒத்த ரூபாய் - உதயா

என் தோல் சுருங்கி
.......... குருதி சுண்டி விட்டது
என்னுடலில் வலிமை பறந்து
.......... இயலாமை ஆட்கொண்டு விட்டது

பசியின் மயக்கத்தில் என்
.......... செவிகளிரண்டும் அடைத்து விட்டது
ஏதோ ஒரு ஒலி மட்டும்
.......... என் செவிப்பறையில் குடிகொண்டுவிட்டது

வெயிலின் வீரியத்தால் நான்
.......... கானல் நீரில் மயங்கியிருந்தேன்
பலவேளை உணவருந்தா காரணத்தால்
.......... சுழ நினைவையும் இழந்துயிருந்தேன்

பாட்டி பாட்டி எனும் அவளின் அழைப்பு
.......... எமையெழுப்பி பல்லாக்கில் அமரவைத்தது
ஒத்த ரூபாய் வெனுமாயென அவள் உதிர்த்த சொற்கள்
.......... எம்மை ஆனந்த தோணியில் மிதக்க வைத்தது

ஒத்த ரூபாய்யெனும் சொல் எம்செவியில் ஒலித்ததும்
.......... எம் கரத்தினில் நடுக்கத்தோடு யானை பலங்கலும் புகுந்தது
என் கயல் விழியின் இமைப் பூட்டு திறக்கையில்
.......... என் பிச்சைப்பாத்திரம் அவள் அருகில் விரைந்து நின்றது

என் மகனின் சாயலில்
.......... அச்சிறுமியைக் கண்டேன்
அவளின் துள்ளல் பேச்சினில்
.......... சுழ நினைவையும் அடைந்தேன்

புன்னகையும் கண்ணீரும் என்
.......... முகத்தில் முடிவின்றி தொடர்ந்தது
என் வாழ்வின் மாற்றமே காரணமென்று
.......... அவள் அறிந்திருப்பாளென என்மனமும் உணர்ந்தது

என் பார்வையின் ஏக்கத்தில் அப்பாவையிடம்
.......... பல வேண்டுகோளினை திணித்துவைத்தேன்
எந்நாளும் உம்தாயை எம்கதிக்கு துரத்தாதேயென
.......... அதில் ஆணிதனமாய் சொல்லிவைத்தேன்

என் மகனை சீராட்டி பாடிய
.......... பாடலெல்லாம் மறந்து போனது
என்னை வீட்டைவிட்டுபோயென அவன்
.......... கூறிய சொல்மட்டும் மனதில் மறையா வடுவானது

ஒத்த ஒரூபாய் என் தட்டில் விழுவதற்குள்
.......... ஓராயிரம் எண்ணம் என்னுள் தோன்றி மறைந்தது
தர்மமிட்ட பதுமைக்கு என் வாழ்வு குறும்படமாய்
.......... மாறியிருக்கும் என்று உள்ளம் உணர்ந்தது

அவள் பிச்சையிட்ட காசினை
.......... உணவுப் பொருளாய் மாற்றுவதற்குள்
அவள் ஏதோ ஒன்றை என்னிடம் பயின்று சென்றாளென
.......... ஒரு மகிழ்வு மலர்ந்துவிட்டது என் மனதிற்குள்

எழுதியவர் : udayakumar (4-Jun-15, 7:23 pm)
பார்வை : 450

மேலே