பொள்ளாச்சி அபி சிறுகதை திறனாய்வுப்போட்டி- புயலின் மறுபக்கம்-சகி

புயலின் மறுபக்கம் -

கதைக்கரு இன்றைய சமுதாயத்திற்கு மட்டுமல்ல ,கடந்தகால சமுதாய மத எண்ணங்களுக்கும் ,இனி வரும் சமுதாய சாதி , மத எண்ணங்களுக்கும் அவசியமான ,அனைவருமே அறிந்தும் புரிந்தும் கொள்ளகூடிய உணர்வுகளும் உணர்ச்சிகளும் என்றே சொல்லலாம் ..



"தேவகியும் அவள் கணவனும் காதல் திருமணம் அதுவும் மதம் மாறிய கலப்புத்திருமணம்"
கதையின் இறுதியில் திரு . அபி சார் சொல்லிய விதம் மிக நுணுக்கமே.




“தேவகி”

“இறந்தது யாரு..?”

“என் புருஷன்”

“வயசு.?”

“இருபத்தெட்டு”

“பேரு..?”

“அப்துல் காதர்.”

“என்ன..என்ன சொன்னீங்க..?”

“என் கணவர் பெயர் அப்துல் காதர்..”இம்முறை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் தேவகி.

கதையின் இறுதி வரிகள் சொல்லிய கரு மிக சிறப்பு .

தேவகியின் குடும்ப உறவுகளின் எண்ணங்களையும் ,அண்ணனின் வாழ்த்துகளும் அவள் மனதில் நினைத்த விதமும் அவளின் மனதை நிஜப்படுத்துகிறது வரிகள்....

""மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.""

""மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்.."",

கலவரம் பின் அவ்விடத்தை காட்சியாக கண்முன்னே நம்முன் நிறுத்தும் வரிகள் .....

நொடியில் மாறும் திரைப்படக் காட்சிபோல ஒரேநாளில் இந்நகரத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டது எது..?""

கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் நடந்த அக்கலவரத்தை மிக
நுணுக்கமான வரிகளில் சொல்லிவிட்டார்

""உற்சாகக்குரல்களோ, உவகைத் துடிப்புகளோ எதுவுமின்றி திரும்பிய பக்கமெல்லாம் ஒப்பாரியும் கேவல்களுமாய் மனிதர்கள்..""

""கூக்குரலிட்டுக் கொண்டு,தலையிலடித்துக்கொண்டோ,வாய்விட்டுக் கதறிக்கொண்டோ, பிணவறையை நோக்கி ஓடுகிறார்கள்.அவ்வப்போது அவர்களால் உச்சரிக்கப் படும் பெயர்கள் மட்டும் வெவ்வேறாயிருக்கும்"".

""உறவினர்களின் அழுகுரல்கள் உச்சத்தைத் தொட்டது.வயிற்றிலும் வாயிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு அலறும் சப்தம்.அந்த மருத்துவமனை முழுக்க எதிரொலித்தது.""

உறவுகளை இழந்த உறவுகளின் உணர்வுகளை
வலிகளை வரிகளில் சொல்லியவிதம் மனதை வாட்டியது .


""அவளுடைய இரு கன்னங்களிலும் ஒழுகிக் காய்ந்திருந்த கண்ணீர்த் தடங்களில்,அப்பியிருந்த புழுதியை முந்தானையால் துடைத்தவளாய் ""

தேவகியின் வலிகளை கன்னங்களில் காய்ந்த கண்ணீர்த்துளிகளின் வழியே சொல்லியவிதம்
உருவமில்லா கற்பனையான தேவகிக்கு உயிர்கொடுகிறது மனதில் ....

""ஜனங்கள்.குல்லாவும் தாடியும் கைலியுமாய், காவிவேட்டி, கறுப்பு, வெள்ளை வேட்டி பேண்ட் சட்டைகளுமாய் ஆண்களும், வண்ணவண்ணப் புடவைகளும், உடல் மறைத்த அங்கிகளுமாய் பெண்களும்,""

உருவமே இல்லா மதத்திற்காக பல உயிர்கள் மாண்டு மண்ணில் பிணமாக விழ
அனைத்துமதங்களும் ஒன்றாக கூடியதை இவ்வரிகளில் எளிமையாக சொன்னவிதம் மிக சிறப்பு ....

மதத்தைக் காப்பாத்தறேன்னு மனுஷங்களை கொன்னுபுட்டா ஆச்சா..?”
“ஹே..பாத்திமா..”ஏதோ ஒரு ஆண்குரல் அதிகாரத்தோடு, ‘வாயை மூடு’ என்ற தொனியில் ஒலிக்க,முனகிக் கொண்டே எழுந்து சென்றாள் அந்த மாது.""

இவ்வரிகளில் ஆணாதிக்கமும், மதமும் இன்னும் அழியவில்லை என்றே சொல்லல்லாம் ...
திரு.அபி சார்
அவர்கள் மிக எளிமையான வரிகளில்
ஆழமான கருத்தை வெளிபடுத்தியிருக்கிறார் .

“எங்கே கொண்டுபோறது..அவங்கவங்க சடங்கை முடிஞ்சவரை இங்கேயே பண்ணிட்டு ஒட்டுமொத்தமா ஆத்துப்பாலம் சுடுகாட்டுக்கு கொண்டுபோக வேண்டியதுதான்.அங்கதான் பக்கம்பக்கமாய் எல்லா ஜாதிக்கும் இடம் ஒதுக்கியிருக்கே..”

எத்தனை உயிர்கள் மாண்டாலும் மதமும் மனிதனின் மதவெறியும் மடிவதில்லை என்பதை
இவ்வரிகள் நன்கு உணர்த்துகிறது....

“ஓஹோ..அப்படியா..ஏற்பாடு.?” ஏதோ சில விநாடிகள் யோசித்த கறுப்புவேட்டி மனிதர், “உயிரோட இருக்கும்போது சாதி மதத்துக்காக சண்டைபோடற மத்தவனெல்லாம், இப்போ ஒண்ணா சுடுகாட்டுக்கு போற பிணங்களைப் பாத்தாவது யோசிப்பாங்களா பாய்..?”அவர் குரலில் அங்கலாய்ப்பும் வருத்தமும் இழைந்தன.

“எல்லாருக்கும் ஆறடி மண்ணு தவிர கடைசியிலே சொந்தமா எதுவுமே
இல்லேங்கிறது புரிஞ்சாலே போதுமே..!” அலுப்பும் சலிப்புமாக வந்தது அந்தக் குரல்.

இவ்வரிகளில் நான் உணர்ந்தது எதிர்பார்ப்பும் ,ஏக்கமும் அக்குரலில் உண்டு என்பதே ....
தேவகியின் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் கண்முன்னே ஒரு உண்மை நிகழ்வாகவே
கதைகருவை நிறுத்துகிறது ....ஒவ்வொருவரிகளும் வாசிக்கும் தருணம் அவை நிஜமாகவும் ,நிகழ்வாகவுமே
எண்ண வைக்கின்றன.

"அனைவருக்குமே நன்றிகள்"

எழுதியவர் : சகி (5-Jun-15, 2:55 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 71

சிறந்த கட்டுரைகள்

மேலே