பெண்கள் மற்றும் ஓட்டுனர்கள் கவனத்திற்கு - சகி

பாவையே ....

நம் ஆயுளின் முடிவுநாள்
யாரும் அறிந்திருக்க
சாத்தியமில்லை ....

பேருந்துப்பயணம் அனைவருமே
பல்வேறு கனவுகளுடனே
பயணமாகிறோம்....

வாழ்க்கையிலும் பயணத்திலும்....

பேருந்து ஓட்டுனரிடம்
சில மங்கைகள் யதார்த்தமாகவே
பேசினாலும் கூட ஓட்டுனரின்
கவனம் சிதறுமே ....

கண்ணாடி சிதறல்கள்
போல உயிர்களும் ,உடல்களும்
சிதறிவிடும் ....

கதறி அழுதாலும் உயிரற்ற
உடல்கள் மீண்டும்
உயிர் பெறப்போவதில்லை...

சிறு கவனச்சிதறலில்
பயணமாகும் அனைத்து
உயிர்களுமே பலியாகிவிடும்
என்பதை மட்டும் மறவாதே ....

எதிரில் வரும் வாகனங்களுமே
பாதிக்கப்படும் என்பதயும்
மறந்துவிடாதே மங்கையே ....

சகப்பயணிகளின் பார்வைகள்
உன்மீது வெறுப்பும் ஆத்திரமும்
எய்தப்படும் என்பதையும் மறவாதே ...

(பேருந்துப்பயணம் மேற்கொள்ளும்
சில தோழிகளுக்கு இது என் அன்பான
வேண்டுகோள் ,முடிந்தவரை இத்தவறுகளை
நிகழாமல் தடுக்கலாம் )

எழுதியவர் : சகி (5-Jun-15, 6:19 pm)
பார்வை : 60

மேலே