என்வழி தனிவழி
![](https://eluthu.com/images/loading.gif)
வளர்ந்துவிட்டக் காரணத்தால்
எனைத்தொடராதே இனிமேல்
என்வழி தனிவழியென
ஒதுங்கிநின்றாள் எந்தாய்.
மனிதருடன் வாழ்ந்த பின்னும்
அன்புடன் சேர்ந்து வாழாது
பிரிக்கநினைப்பது தகுமோயென
பிஞ்சுமொழியில் வினவிநின்றேன்.
மடையாஇது மனிதரிடம்கற்றதுதான்
பின்னால் வருந்துவதைவிட
இப்போதே பிரிந்திடலாம்
மியாவ்மியாவ் என்றதுதாய்ப்பூனை