ஒரு நிமிடத்தில் vantha காதல்

கண் மூடி கடற்கரையோரம்
நான் படுத்திருக்க
ஏதோ அரவம் கேட்டு
விழி திறந்தேன்

இரு கயல் மீன்கள்
உற்றுப் பார்க்க
இது கனவா ? நனவா ?
சந்தேகம் தீர கிள்ளிப்
பார்த்தேன்

'ஆவ்' வலித்தது
செங்கனி ஒன்று
புன்னகைக்க கண்டு
தவறு தவறு
அவை பெண்ணின்
உதடுகள் என அறிய
திகைத்து சற்று பின் தள்ளி
நின்றேன்

என்ன ஆச்சரியம்
வானத்து நிலா பூமிக்கு
வந்து விட்டதா ?
ஒரு நிமிடம் தான்
நின்றாள்! சிரித்தாள் !

என் கல் நெஞ்சில்
பூ எரிந்து பிளவு பட
செய்தாள்

எழுதியவர் : fasrina (6-Jun-15, 12:27 pm)
பார்வை : 68

மேலே