மழைக்களம்

உச்சந்தலையில் விழுந்து தெறித்தன,
சத்தமில்லாமல் சரிந்த மழைத்துளிகள்,
இரைச்சலை மொழிந்த பறவைகளினூடே,
திகைப்பும்கலக்கமுமாய் திரிந்தது மதி,
தூரலில்தான் துவங்கியிருக்கும் இந்த,
மேனிதடவி நனையவைத்த பெரும் ஈரம்,
நகர்ந்துகொண்டிருந்ததில் விழுந்தபடியே,
இண்டு இடுக்குவிடாமல் நீரின் தோரணம்,
அலுவல் தற்சமயம் இன்றியமையாதது,
மழையின் நடனமோ நின்று முடியாதது,
எதைவிடுத்து கோப்புகள் கொப்பளிக்காமல்,
உரிய இடத்தில் விரைந்துபோய் சேர்த்து நிற்க,
கூடிய வேகம்பார்த்து விட்டுவிடுமா சாரல்,
தவறிவிழுந்தால் எழமுடியாதபடி எக்காளமிட்டு,
முட்டியளவு நீர்பெருக்கி பற்றுதல் செய்தது உடன்,
வழியை மறைத்து விழியை சிதைத்து ஒளியளித்து,
உவகையின் உச்சத்தில் எள்ளி நகையாடியது எனை,
சுற்றி அரவமின்றி நிழல்விரட்டி ஆக்கியது பிணை,
அனைத்தும் முடிந்து ஆட்டம் அடங்கியதும்தான்,
செயலாற்றி ஜெயிக்க முடிந்தது என்னால் அலுவலை,
தொப்பலாய் நனைந்த எனக்குள் சிக்கலாய் ஒரு வினா?
சொட்டுவிடாமல் இதையெல்லாம் தேக்கி,
வைத்துவிடமுடியாதா நமைத்தாண்டி சந்ததிக்கு?
இளைப்பாறி மனிதயினம் களைப்பின்றி பயணிக்க !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (6-Jun-15, 8:59 pm)
பார்வை : 59

மேலே