முடிவில்லா ஆரம்பம்

கண்கள் இருண்டது
தொண்டை வறண்டது
உருவிய மூச்சுக்காற்றில்
உலர்ந்து போனது உடம்பு…

காட்சியின் நீளம்
காண வருவோர் கை
குலுக்கி வரவேற்க இடம்
தரவில்லை காலம்…

சங்கொலியும் மணி
சத்தமும் காற்றில்
கரைகிறது கால
இடைவெளியில்…

எதிர்ப்பில்லா சடங்குகள்
அர்த்தமில்லா அலங்காரம்
வரவேற்பில்லா கல்யாணம்…

மூங்கில் கட்டில்
பின்னிய தென்னை
மெத்தை அலங்கார
அணிவகுப்பு…

சிறு மூளை
பாதித்த தப்பாட்டம்
சில நொடிகளில் முடிவுக்கு
வந்தது என்னாட்டம்…

உனக்கு எனக்கு என
உதிரிப்போட்ட
ரோஜா மாலை…

புறப்பட்டது முடிவிலா
பயணம் இறுதியில்
வந்தது போற இடம்…
எனக்காய் காத்திருக்கிறார்
உருவம் சிதைக்கும்
உன்னத பெரியவர்…!!!

கார் பங்களா
ஏசினாலும் காட்சி
என்னவோ ஒண்ணுதான்…

வாழும்போது
போடா சோறு
வேகும் முன்னே
போடுவர் வாய்க்கு…!!!
வேணாம்னு சொல்லக்கூட
வாய்ப்பில்லை…!!!

வைத்த நெருப்பில்
தாங்கவில்லை சூடு
கத்தினாலும் கேட்கவில்லை
அதுவே எந்தன் பாடு…

சடங்கு முடிந்தது
சபையும் கலைந்தது…
முடிவில்லா ஆரம்பம்
தொடங்குகிறேன்…

எழுதியவர் : சகா (சலீம் கான்) (6-Jun-15, 10:46 pm)
Tanglish : mudivilla aarambam
பார்வை : 287

மேலே