உன் கூந்தலில்

கட்டுக்கு அடங்காத உன் கூந்தலில்
கொள்ளை மணம் கொள்ளும்
மல்லிகையாக இருக்கக் கூட
நான் விரும்பவில்லை....

தளிர் போன்ற
உன் உள்ளங்கைக்குள்
கசங்கிய கைக்குட்டையாக
இருந்தால் கூட போதும்
என் வாழ்வில் வசந்தம் வீச....

எழுதியவர் : சாந்தி ராஜி (6-Jun-15, 10:23 pm)
Tanglish : un koonthalil
பார்வை : 370

மேலே