வழி என்ன சிலேடை பஃறொடை வெண்பா

மாதுளப் பூமலரு(ம்) மாமரமே சொல்நீ.பூக்
காதுளப் பூவைப்பார்க் காதிருப்பின் =தீதுளதே!
தோதுளதோ காட்டு(க்). கொடியிடைக் காம்பதன்
மீதுள தேமாங் கனித்தேன் வரவழி
ஏதுளதோ? என்றுத் தனித்தேன் இருந்தருந்தா
போதுளம் வாடித் தனித்தேன். எனதுளத்து
தூதுக்கு ஏது வழி?

**மெய்யன் நடராஜ்**

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Jun-15, 3:00 am)
பார்வை : 243

மேலே