சிணுங்கியதெப்படி

அப்பா அழைத்தபோது
அலறிய கைபேசி

அம்மா அழைத்தபோது
அழுத கைபேசி

மேலாளர் அழைத்தபோது
மிரட்டிய கைபேசி

நண்பன் அழைத்தபோது
நடுங்கிய கைபேசி

அவள் அழைத்தபோது மட்டும்
அழகாய்ச் சிணுங்கியதெப்படி ...

எழுதியவர் : மீ.மணிகண்டன் (7-Jun-15, 2:52 pm)
பார்வை : 154

மேலே