மில்லியே உயிர்களின் வில்லியே
மில்லியே!!! மில்லியே!!!
குடிக்கார்களின் உயிர்க்கொல்லியே!!!
விட்டில் பூச்சி விளக்கில் மடியலாம்
மீன்களும் தூண்டிலில் மாட்டலாம்
பூச்சிகள் நிபெந்தெஸ் செடிக்கு இரையாகலாம்
புதைகுழியில் யானை அகப்படலாம்
பத்தயத்துக்கு எலிகள் பலியாகலாம்
மதுவுக்கு மனிதன் சிக்கலாமா
மதுக்கடை முன் அவன் நிற்கலாமா
ஆண்டவன் கொடுத்த ஆறறிவை மதுவிற்கு விற்கலாமா ?
மதுவே !!!நீ
மனித யாக்கையை உனதாக்கினாய்
மனித வாழ்க்கையை உணவாக்கினாய்
சொர்கத்தையும் நரகத்தையும் காட்டுவதிலும்
தப்பு செய்தவனை நின்று கொல்வதிலும்
மதுவும் தெய்வமும் ஒன்று
இருந்தும் ஓர் வேறுபாடு
தெய்வம் உயிர்களைக் காக்கும்
மதுவோ உயிர்களைப் போக்கும்
மது அருந்த மனிதன் பிடிக்கும் கோப்பைக்காம்பு
மரணம் விரைவில் பெற அவன் பிடிக்கும் விஷப்பாம்பு
உன்
ஈரம் பட்டு
ஈரல் கெட்டு போகிறான்
உன்னை அருந்த தொட்டவன்
பருவம் வந்ததும் அனைவருக்கும் வரவேண்டிய ஒன்று பால்மயக்கம்
ஏனோ தவறாக பலருக்கு வந்துவிடுகிறது மதுவின்பால் மயக்கம்
காரிருள் போக்க இன்று பயன்படுத்த வேண்டியது மின்விளக்கு
குடிப்பழக்கம் எனும்
ஓரிருள் போக்க இன்று அமல்படுத்த வேண்டியது மதுவிலக்கு
#I support Nandhini #
(இப்படைப்பினை படைக்க தூண்டுதலாய் அமைந்த நண்பர் நல்லை.சரவணா அவர்களுக்கும் முகமது சர்பான் அவர்களுக்கும் நன்றி)