வெறும் கல்லாய் இவன்
அதிருஷ்டம் என்ற உழி
படாத கல் இவன்....
இறைவன் படைப்பில்
சிலை வடிவம் பெறாத
கண்ணீர் கசியும்
உருவம் இல்லா பாறை இவன்...
பலர் கால் மிதி பட
அவர்களை உயர
வாழ்வின் உயர ஏற்றி விட்டு
ஏக்கத்தோடு ..
ஏங்கி தரையில் மண்ணோடு
உறவாடும் வெறும் கல்லாய் இவன்
என்றும்...என்றென்றும்....
ஜீவன் ......

