இருமனம் இணையும் திருமணம்
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவனே ……….!!!!!
பட்டாடை உடுத்தி ,
ஜரிகைகளின் ஓசையுடன் ,
புன்னகையோடு பொன்னகைகள் அணிந்து ,
தோழிகளின் கேளிக்கையில் ,
முகம் முழுவதும்
வெக்கத்துடன் மனமேடைஏற ,
உன் முகத்தில் தவழும்
குழந்தைத்தனமான
புன்னகயை நான்
சற்றே ஓரக்கண்ணில் பார்த்து ,
உன் அருகில் அமரவே ,
மலர்மாலை சூடி ,
எட்டுத்திக்கும் கெட்டிமேளம் முழங்க ,
பார்பவர்கள் கண்வியக்க ,,,,!!!!!!!!
உன் இரு கரங்களால்
மாங்கல்யம் எடுத்து வரவே ,
என் சிரம் தாழ்த்தி ,
உன்னை என்னவனாக ,
என்னை உன்னவலாக ஏற்று ,
உன் இரு கரங்களால்
என் மார்போடு
நான் மாங்கல்யம் ஏற்று ,
உன் கரம் பிடித்து ,
ஊரே காண
அக்னியை சுற்றி வரவே ,
இனி நீ நான் என்பது
நாம் என மாறவே ,
நீ என்னவன் என்ற உரிமையுடன்
நான் உன்னவள் என்ற
கர்வத்துடன் உன்னருகே நின்று ,
உன் கைகோர்க்க வேண்டும் என்று
எண்ணிக்கொண்டே இன்றும்
உன்னை காதலிக்கிறேன் ………….!!!!!!!!
நாளை நான்
உன் மனைவியாக வேண்டும் என்றும் ,
நீ என்றும் என்னவன் ,
எனக்கானவன்தான் என்றும் ,
இனிதே மாறட்டும்
நம் காதல் அத்தியாயம் ,
திருமண வைபோவத்தில்,,,,!!!!!!!!!!!
பலநூரண்டுகள் ஒன்றாக வாழவே ……..
வந்துவிடு நம் திருமண தேதியுடன்
அதுவரை நான் காத்திருக்கிறேன்
என்றும் உன் நினைவுகளுடன் ........